மொபைல் போன் ஹேங் ஆகிடுச்சா? அப்போ இத Try 4 பண்ணுங்க…

மொபைல் போன் கையில் இருந்தால் போதும் வேறு எதுவும் வேண்டாம் என்றளவிற்கு உலகம் மாறிடுச்சு.

இத்தகைய பணிகளை செய்யும் மொபைல் போன் ஹேங் ஆனால் கூட பதற்றம் அடைந்து விடுகிறோம்.

மொபைல் போன் இல்லை என்றால் உலகம் இருண்டு விட்டது போல் தோன்றும் அளவிற்கு ஓர் அத்தியாவசிய பொருளதாக மொபைல் போன் உருவெடுத்துள்ளது.

இவ்வாறிருக்க மொபைல் போன் ஹேங் ஆனால் இதை செய்து பாருக்கு உங்க போன் புத்தம் புதியதாக மாறிவிடும்.

ஆன்ராய்டு போன்களை ரீசெட்செய்வதன் மூலம் பல நன்மைகள் கிடைக்கும். மொபைல் போன் சிறப்பாக செயல்பட வேண்டும் என்பதற்காக நீங்கள் பதிவிறக்கம் செய்திருக்கும் செயலிகளை விட இது நல்ல மாற்றத்தை கொடுக்கும்.

இதை செய்வதன் மூலம் உங்கள் மொபைல் போன் புத்தம் புதியது போல் செயல்பட தொடங்கிடும். இது உங்கள் போனின் ஸ்டோரேஜை கிளியர் செய்வதுடன் மொபைல் போனில் இருக்கும் வைரஸ்களையும் நீக்கிவிடும்.

அதுதான் ஆன்ராய்டு போன்களில் இருக்கும் ஃபேக்டரி ரீசெட். உங்கள் மொபைல் போன் மெதுவாக இயங்கும் போது அது வேகமாகவும், புதியது போல் இருக்க வேண்டும் என்று விரும்பினாலோ உங்களுக்கு இதைவிட சிறந்த தேர்வு இருக்காது.

இதை செய்வதற்கு முன்பு உங்கள் மொபைல் போனில் உள்ள டேட்டாக்களை பேக் அப் எடுத்து வைத்துக்கொள்ளுங்கள்.

அதுமட்டுமன்றி உங்கள் மொபைல் போனில் முழு சார்ஜ் இருக்கிறதா என்பதையும் உறுதி செய்துக்கொள்ளுங்கள்.

Recommended For You

About the Author: admin