இந்திய முதலீட்டு நிறுவனமான அதானி குழுமம் எரிசக்தி திட்டங்களுக்கான முதலீடுகளின் போது இந்திய அதிகாரிகளுக்கு இலஞ்ம் வழங்கியிருக்கலாம் என்ற கோணத்தில் அமெரிக்கா விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக அமெரிக்காவை தளமாகக் கொண்டு இயங்கும் ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
அதேவேளை அதானி குழுமத்தின் ஸ்தாபகர் கௌதம் அதானியின் நடத்தை குறித்தும் விசாரணைகள் இடம்பெறுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பான விடயங்களை சட்டத்தரணிகள் ஆழமாக திரட்டிவருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
முதலீட்டில் தமக்கு சாதகமான காரியங்களை ஆற்றுவதற்கு அதிகாரிகளை தமது கைக்குள் போட்டுக்கொள்ளும் வகையில் இலஞ்சம் கொடுக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் அமெரிக்காவிடம் வலுவாக உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.