பா.ஜ.கவுடன் உத்தியோகபூர்வ கூட்டணியை அமைத்தார் நடிகர் சரத்குமார்

இந்தியாவின் ஆளும் கட்சியான பா.ஜ.கவுடன் நடிகர் சரத்குமார் கூட்டணி அமைத்துள்ளார்.

சென்னை தியாகராய நகரில் உள்ள பா.ஜ.க கட்சி அலுவலகத்தில் பா.ஜ.கவின் தமிழகத் தலைவர் அண்ணாமலை முன்னிலையில் சரத்குமார் தனது சமத்துவ மக்கள் கட்சியை பா.ஜ.கவுடன் இணைத்துள்ளார்.

இந்த முடிவு நாட்டின் வளர்ச்சிக்காகவும், இளைஞர்களின் வளர்ச்சிக்காகவும் எடுக்கப்பட்டதாக சரத்குமார் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கடந்த ஆண்டுகளில் அ.தி.மு.க கூட்டணியில் தேர்தலை எதிர்கொண்ட சமத்துவ மக்கள் கட்சி, பா.ஜ.கவுடன் கூட்டணி தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்திவந்த நிலையில், எதிர்வரும் மக்களவைத் தேர்தலில் பா.ஜ.கவுடன் கூட்டணி அமைத்து போட்டியிடவுள்ளதாக சரத்குமார் அறிவித்திருந்தார்.

இந்நிலையிலேயே சமத்துவ மக்கள் கட்சியை பா.ஜ.கவுடன் சரத்குமார் இணைத்துள்ளது இந்திய அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Recommended For You

About the Author: admin