பத்தும் நிஸ்ஸங்க இரட்டை சதம் – 381 ஓட்டங்களை குவித்த இலங்கை
ஆப்கானிஸ்தானுக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் பத்தும் நிஸ்ஸங்க இரட்டை சதம் விளாசியுள்ளார்.
இதன்மூலம், ஆடவர் ஒருநாள் போட்டியில் இரட்டை சதம் அடித்த முதல் இலங்கை வீரர் என்ற பெருமையை அவர் பெற்றார்.
இப் போட்டியில் மொத்தமாக 139 பந்துகளை எதிர்கொண்ட அவர் எட்டு சிக்ஸர்கள், 20 பவுண்டரிகள் அடங்கலாக 210 ஓட்டங்களை ஆட்டமிழக்காது குவித்துள்ளார்.
கண்டி, பல்லேகல மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த ஆட்டத்தில் இலங்கை அணி 20 ஓவர் நிறைவுக்கு 381 ஓட்டங்களை குவித்துள்ளது.
ஆட்டத்தில் அவிஷ்க பெர்னாண்டோ 88 ஓட்டங்களையும், சதீர சமரவிக்ரம 45 ஓட்டங்களையும் பெற்றமையும் குறிப்பிடத்தக்கது.