சுகாதார சேவையின் தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து ஆரம்பித்துள்ள பணிப்புறக்கணிப்பு போராட்டம் இன்று காலையுடன் முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வைத்தியர்களுக்கு வழங்கப்படவுள்ள 35,000 ரூபா கொடுப்பனவை தங்களுக்கும் வழங்குமாறு கோரியே மேற்படி பணிப்புறக்கணிப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இந்த கொடுப்பனவை வழங்குவதற்கு அமைச்சரவை எடுத்த தீர்மானத்துடன், சுகாதார ஊழியர்கள் கடந்த செவ்வாய்கிழமை பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை ஆரம்பித்தனர்.
இதனால், நாடளாவிய ரீதியில் வைத்தியசாலைகளின் செயற்பாடுகள் பாதிக்கப்பட்டன.
இது தொடர்பில் கருத்து தெரிவித்த சுகாதார சேவை தொழிற்சங்க கூட்டமைப்பின் அழைப்பாளர் ரவி குமுதேஷ்,
இந்த பிரச்சினைக்கு தீர்வு காண ஜனாதிபதி தலையிடாவிட்டால் எதிர்காலத்தில் மீண்டும் தொழில்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக தெரிவித்தார்.