காவன்திஸ்ஸ யானை மீது துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவம்; மேலும் 5 சந்தேகநபர்கள் கைது
காவன்திஸ்ஸ யானை மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் மேலும் ஐந்து சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சுற்றாடல் அமைச்சின் அறிக்கையின்படி, வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களம், பாணந்துறை வலான மத்திய மோசடி தடுப்புப் பிரிவு மற்றும் பொலிஸார் இணைந்து மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின்போது இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஆரம்பத்தில் கைது செய்யப்பட்ட பிரதான சந்தேகநபர், யானை மீது துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவத்துடன் நேரடியாகத் தொடர்புடையவர் என விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.
கைது செய்யப்பட்டவர்களிடம் கல்கமுவ பொலிஸாரும் வனஜீவராசிகள் அதிகாரிகளும் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். துப்பாக்கி மற்றும் சட்டவிரோத வனவிலங்கு கடத்தல் வலைப்பின்னல் தொடர்பிலும் விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

