பலாலி விமான நிலைய அபிவிருத்தி குறித்து ஆராய்வு

இந்தியத் துணைத்தூதுவர், வடக்கு மாகாண ஆளுநர் இடையே சந்திப்பு.

இந்திய துணைத்தூதுவர் திரு. ராகேஷ் நடராஜ் அவர்கள், வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் அவர்களை சந்தித்து கலந்துரையாடினார்.

வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது.

நாகபட்டினத்திற்கும், காங்கேசன்துறைக்கும் இடையில் பயணிகள் படகு சேவையை ஆரம்பித்தல், பலாலி விமான நிலைய அபிவிருத்தி நடவடிக்கைகள், சுற்றுலா துறை அபிவிருத்திகள் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டது.

Recommended For You

About the Author: S.R.KARAN