தென்னாப்பிரிக்க அணியின் முன்னணி துடுப்பாட்ட நட்சத்திரம் ஹென்ரிச் கிளாசென், சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
எனினும் அவர் ஒருநாள் மற்றும் டி:20 போட்டிகளில் தொடர்ந்தும் விளையாடுவார்.
வரையறுக்கப்பட்ட ஓவர்கள் வடிவத்தில் தென்னாப்பிரிக்காவிற்காக ஒரு சிறந்த செயல்திறன் கொண்ட கிளாசென், தனது கிரிக்கெட் வாழ்நாளில் நான்கு சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் மாத்திரம் விளையாடியுள்ளார்.
அவர் 2019 ஆம் ஆண்டு ரஞ்சியில் இந்தியாவுக்கு எதிரான போட்டியில் அறிமுகமானார். இறுதியாக கடந்த 2023 மார்ச் மாதம் ஜோகன்னஸ்பர்க்கில் மேற்கிந்தியத்தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் விளையாடினார்.
விக்கெட் காப்பாளர் – துடுப்பாட்ட வீரரான அவர் தனது நான்கு டெஸ்ட் ஆட்டங்களில் 13 சராசரியுடன் மொத்தம் 104 ஓட்டங்களை மாத்திரம் எடுத்துள்ளார்.
சிட்னியில் அவுஸ்திரேலியாவுக்கு எதிராக 35 ஓட்டங்களை எடுத்ததே அவரது அதிகபட்ச ஓட்ட எண்ணிக்கை ஆகும்.