இலங்கை அணி ஒன்பது விக்கெட் இழப்புக்கு 279 ஓட்டங்கள் குவிப்பு

சுற்றுலா சிம்பாவே மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் போட்டியில் சிம்பாவே அணிக்கு 274 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் இடம்பெறும் இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடியது.

இதன்படி, இலங்கை அணி ஐம்பது ஓவர்களில் ஒன்பது விக்கெட்டுகளை இழந்து 273 ஓட்டங்களை பெற்றிருந்தது.

சரித் அசலங்க 101 ஓட்டங்களையும், குசல் மெண்டிஸ் 46 ஓட்டங்களையும், சதீர சமரவிக்ரம 41 ஓட்டங்களையும் பெற்றிருந்தனர். எனினும், பின் வரிசை துடுப்பாட்ட வீரர்கள் சொற்ப ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தனர்.

சிம்பாவே அணி சார்பில் ரிச்சர்ட் ங்கரவா, பிளசிங் முசரபானி மற்றும் ஃபராஸ் அக்ரம் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தனர்.

இலங்கைக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள சிம்பாவே அணி மூன்று ஒருநாள் மற்றும் மூன்று இருபதுக்கு இருபது கிரிக்கெட் தொடர்களில் விளையாடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: admin