விஜய குமாரதுங்கவின் வாழ்க்கை திரைப்படமாகிறது

இந்தியாவின் மிகப்பெரிய திரைப்பட தயாரிப்பு நிறுவனமான லைகா புரொடக்ஷன்ஸ் (Lyca Productions), சிங்கள சினிமாவின் மாபெரும் நாடக ஆளுமையான விஜய குமாரதுங்கவின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக இந்நாட்டு ரசிகர்களுக்கு வழங்கவுள்ளது.

“விஜய” என்ற பெயரில் இந்த திரைப்படம் தயாரிக்கப்பட உள்ளது. இப்படத்தின் பணிகள் ஏற்கனவே துவங்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளன.

இத்திரைப்படத்தில் விஜய குமாரதுங்கவின் கதாப்பாத்திரத்தில் இலங்கை ரசிகர்களின் மனதைக் கொள்ளைக்கொண்டுள்ள தற்போதைய இலங்கைத் திரையுலகின் சூப்பர் ஸ்டாராக கொண்டாடப்படும் ரஞ்ஜன் ராமநாயக்க நடிக்க உள்ளார்.

இது குறித்து அவர் தனது முகநூல் கணக்கில் புகைப்படத்துடன் குறிப்பொன்றை வெளியிட்டு தனது ரசிகர்களுக்கு தெரிவித்துள்ளார்.

லைகா தயாரிப்பு நிறுவனம், இலங்கையில் அதிநவீன திரைப்பட தயாரிப்பு வசதிகளை கொண்ட மத்திய நிலையமொன்றை நிறுவியுள்ளது. இதன் பெயர் Lyca Productions Sri Lanka என்பதாகும்.

நவீன தொழில்நுட்பங்களை பரிமாறிக்கொள்வது மற்றும் உள்ளூர் திரைப்படத்துறையை மேம்படுத்துவதற்காக அங்குள்ள இலங்கையர்களுக்கு பயிற்சி அளிப்பதே இதன் நோக்கமாகும்.

Oruvan

Recommended For You

About the Author: admin