வற் வரி திருத்தத்தினால் தொலைபேசி மற்றும் இணையக் கட்டணங்கள் 42% அதிகரிக்கும் என போலியான செய்திகள் பரப்பப்பட்டு வருகிறது. உண்மையில் தொலைபேசி மற்றும் இணையக் கட்டணங்கள் 3% மட்டுமே அதிகரிப்படுவதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
தொலைபேசி கட்டணங்கள் மற்றும் இணைய வசதிகளுக்கு 15% ஏற்கனவே வற் வரி அறவிடப்படுகிறது. புதிய திருத்தத்தின் கீழ் 3% மாத்திரமே அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன் பிரகாரம் 18% வற் வரி அறவிடப்படும்.
தொலைபேசி மற்றும் இணைய கட்டணங்கள் 42% உயர்வடைந்துள்ளதாக போலியான செய்திகள் பரப்படுகின்றன எனவும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளதது.