மதுபானசாலையை அகற்ற கோரி போராட்டம்

யாழ்ப்பாணம் – உடுப்பிட்டி பகுதியில் அமைந்துள்ள மதுபானசாலையை அகற்ற நடவடிக்கை எடுக்குமாறு கரவெட்டி பிரதேச செயலர் ஊடாக ஜனாதிபதிக்கு மகஜர் ஒன்று கையளிக்கப்பட்டுள்ளது.

குறித்த பகுதியில் காணப்படும் மதுபானசாலையை உடனடியாக அகற்றுமாறு தெரிவித்து உடுப்பிட்டி மக்கள் போராட்டமொன்றை இன்றைய தினம் முன்னெடுத்திருந்தனர்.

“இந்த பகுதியில் மக்களின் எதிர்ப்பையும் மீறி மதுபானசாலை மீள திறக்கப்பட்டது. இதன் காரணமாக குறித்த பகுதி மக்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். அதேபோல் பாடசாலைக்கு செல்லும் வழியில் மதுபானசாலை அமையப்பெற்றறுள்ளதால் மாணவர்களின் நன்நடத்தையும் சீர்குலைகின்றது. எனவே மதுபானசாலையை அமைக்க பிரதேச செயலாளர் வழங்கிய அனுமதியை உடன் இரத்து செய்யவேண்டும்” என போராட்டக்காரர்கள் வலியுறுத்தினர்.

குறித்த போராட்டம் பேரணியான முன்னெடுக்கப்பட்டு கரவெட்டி பிரதேச செயலகத்தை சென்றடைந்தது.

பின்னர் மதுபானசாலையை உடன் அகற்றகோரி பிரதேச செயலாளரிடம் போராட்டகாரர்களால் மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டது.

இதேவேளை குறித்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாய் உடுப்பிட்டி பிரதேசத்திலுள்ள வியாபார நிலையங்கள் மதியம் வரையில் கடையடைப்பில் ஈடுப்பட்டு ஆதரவு வழங்கியிருந்தனர்.

Recommended For You

About the Author: admin