தவறான தகவல்களுடன் அல்லது பெரிய தவறுடன் ஒரு மின்னஞ்சலை அனுப்பும் போது அதை எவ்வாறு சரிசெய்வது என்பதை பார்ப்போம்.
ஈமெயிலில் குறிப்பிட்ட மின்னஞ்சலை அன்சென்ட் செய்ய தனி பொத்தானோ அல்லது அம்சமோ இல்லை என்றாலும் கூட, குறிப்பிட்ட ஈமெயிலை அனுப்பிய பின் அதை ரீகால் செய்வதற்கு குறுகிய நேரம் கிடைக்கும்.
ஒரு மின்னஞ்சலை அனுப்பும்போது, Undo பொத்தான் திரையில் தோன்றும், இது Settings-இல் டைமரை அமைத்திருந்தால் அதிகபட்சம் 30 விநாடிகள் தெரியும்.
குறிப்பிட்ட நேரத்திற்குள் அன்டூ பொத்தானை அழுத்தினால், மின்னஞ்சல் ரத்து செய்யப்படும். ஒருவேளை Gmail பக்கத்தில் வேறு ஏதேனும் ஒரு விருப்பத்தை நீங்கள் அழுத்தினால், அன்டூ பொத்தான் உடனடியாக மறைந்து விடும். ஏனெனில் ஒரு ஈமெயில் அனுப்பப்பட்டதும் அந்த பக்கம் ரெஃப்ரெஷ் செய்யப்படும். இந்த அம்சம் ப்ரவுஸர் அல்லது ஈமெயில் ஆப் ஆகிய இரண்டிலுமே செயல்படும்.
இது தவிர்த்து கூகுள் உங்களுக்கு ஜிமெயிலில் ஒரு confidential mode-ஐயும் வழங்குகிறது. ஈமெயிலில் சொதப்பும் ஒரு நபராக இருந்தால், இது நிச்சயமாக உங்களுக்கு கைகொடுக்கும். நீங்கள் இந்த பயன்முறையை இயக்கினால், பெறுநர்களுக்கு குறிப்பிட்ட மின்னஞ்சலை forward, copy, print அல்லது download செய்ய முடியாது.
மின்னஞ்சலை அன்டூ செய்யும் நேரத்தினை தேர்வு செய்வது எப்படி என்பதைப் பற்றி பார்ப்போம்
ஏற்கனவே அனுப்பிய ஒரு குறிப்பிட்ட ஈமெயிலை ரீகால் அல்லது அன்சென்ட் செய்ய விரும்பினாலும் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள், உங்களுக்கு நிறைய நேரம் கிடைக்காது. அதை செய்ய உங்களுக்கு சிறிது நேரம் மட்டுமே கிடைக்கும்.
அனுப்பட்ட ஈமெயிலை திரும்ப பெற விரும்பினால், ஸ்க்ரீனில் இடது மூலையில் “Message sent” மற்றும் “Undo” அல்லது “View message” போன்றவற்றை பார்ப்பீர்கள்.
மேற்குறிப்பிட்டவைகளில் “Undo” உடனே கிளிக் செய்யவும், அவவ்ளவுதான். குறிப்பிட்ட ஈமெயில் அனுப்பப்படாது.
ஒரு ஈமெயிலை ரீகால் அல்லது அன்டூ செய்வதற்க்கான குறிப்பிட்ட நேரத்தை தேர்வு செய்வது எப்படி?
கம்ப்யூட்டரில் உள்ள ஜிமெயிலுக்குச் செல்லவும்.
மேல் வலதுபுறத்தில் உள்ள செட்டிங்ஸ்-ஐ கிளிக் செய்து, பின்னர் ஆள் செட்டிங்ஸ் என்பதை தெரிவு செய்யவேண்டும்.
“Undo Send” என்பதற்கு அடுத்து, 5, 10, 20 அல்லது 30 விநாடிகள் போன்ற அன்டூ செய்வதற்கான நேரங்கள் உண்டு. அதில் ஒன்றை தேர்ந்தெடுத்தால் சரி..!