சரவணன் விக்ரம் பிக் பாஸில் போலியாக இருப்பது யார் என்ற கேள்விக்கு காணொளி ஒன்றின் மூலம் பதில் கொடுத்துள்ளார்.
கடந்த வாரம் எலிமினேஷனாகி சரவண விக்ரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார்.
சரவணன் விக்ரம் என சொல்வதைவிட டைட்டில் வின்னர் சரவணன் விக்ரம் என்றுதான் அவரை ரசிகர்களும் கூறி வருகிறார்கள். அந்த வகையில் வாராவாரம் எலிமினேட் ஆகும் போட்டியாளர்களை வைத்து விஜய் டிவியின் சமூக வலைதள பக்கம் லைவ் காணொளி வெளியாகும்.
அந்த வகையில் சரவண விக்ரம் கொடுத்திருந்த லைவ் வீடியோவில் பிக் பாஸ் வீட்டில் அவரது பயணத்தை பற்றியும், அவரது கணிப்புப்படி இவர்கள்தான் தாப் 5 இடத்தை பிடிப்பார்கள் போன்ற பல விஷயங்களை பேசியிருக்கிறார்.
இந்த வீட்டில் போலியாக இருப்பது யார் என கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதில் கொடுத்த விக்ரம், விஷ்ணு, தினேஷ் மற்றும் அர்ச்சனாதான் விளையாட்டுக்காக போலியாக இருப்பதுபோல தெரிகிறது என கூறினார்.
மேலும் விஜய் வர்மா இந்த வீட்டில் மிகவும் கடினமான போட்டியாளராக இருப்பதாகவும் விசித்ரா இந்த அளவு கடினமான போட்டியாளராக இருப்பார் என எதிர்பார்க்கவில்லை எனவும் கூறி இருக்கிறார்.