கதாநாயகியாக அறிமுகமாகும் பூர்ணிமா

பிக் பாஸ் பூர்ணிமா கதாநாயகியாக அறிமுகமாகவுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

பூர்ணிமா நாயகியாக நடிக்கவுள்ள படத்துக்கு ”செவப்பி” என்று பெயர் வைக்கப்பட்டுள்ளதுடன் படமானது ஆஹா ஓடிடி தளத்தில் வெளியாகவிருக்கிறது.

பூர்ணிமாவுக்கு பிக்பாஸுக்கு முன்பே இந்த பட வாய்ப்பு கிடைத்துள்ளது ஆனால் தற்போதுதான் படம் குறித்த அறிவிப்புகள் வெளியாகியுள்ளது.

எம்.எஸ்.ராஜா என்பவர் இயக்கும், படத்தின் டைட்டில் லுக் போஸ்டர் வெளியாகி கவனத்தை ஈர்த்திருக்கிறது.

அதாவது முட்டையில் செவப்பி என்ற பெயருடன் அந்த டைட்டில் வெளியாகியிருக்கிறது.

பிக்பாஸ் மூலம் கிடைத்த பிரபல்யத்தையும், அனுபவத்தையும் வைத்து பூர்ணிமா சினிமாவிலும் வெல்ல வாழ்த்துகள் என ரசிகர்கள் சமூக வலைதளங்களில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Recommended For You

About the Author: admin