இங்கிலாந்து அணியின் பயிற்றுவிப்பாளர் குழாமில் பொல்லார்ட் இணைவு!

இங்கிலாந்து ஆடவர் கிரிக்கெட் அணியின் பயிற்றுவிப்பாளர் குழாமில் மேற்கிந்தியத் தீவுகள் அணியின் முன்னாள் சகலதுறை வீரர் பொல்லார்ட் இணைந்துள்ளார்.

அவர் இங்கிலாந்து அணியின் உதவி பயிற்சியாளராக பணியாற்றுவார் என இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் சபையின் ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்கிந்தியத் தீவுகள் அணியின் முன்னாள் தலைவரான பொல்லார்ட், அடுத்த ஆண்டு மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் அமெரிக்காவில் நடைபெறவுள்ள ஆடவர் இருபதுக்கு 20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடருக்கான இங்கிலாந்து ஆடவர் பயிற்சிக் குழாமில் பணியாற்றவுள்ளார்.

கடந்த ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பொல்லார்ட், இந்தியன் பிரீமியர் லீக் போட்டிகளில் இருந்தும் தமது ஓய்வை அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது

Recommended For You

About the Author: webeditor