நத்தார் மற்றும் பண்டிகை காலங்களில் அதிவேக நெடுஞ்சாலையின் வருமானம் சுமார் 40 சதவீதம் அதிகரித்துள்ளது.
கடந்த 22 ஆம் திகதி அதிவேக நெடுஞ்சாலைகளில் 1 லட்சத்து 40 ஆயிரத்து 791 வாகனங்கள் பயணித்துள்ளன.
இதன்மூலம் 464 லட்சத்து 57 ஆயிரத்து 600 ரூபாய் வருவாய் ஈட்டப்பட்டுள்ளது.
அத்துடன், கடந்த 23 ஆம் திகதி 45 ஆயிரத்து 503 வாகனங்கள் பயணித்துள்ளதுடன், அதனூடாக 74 ஆயிரத்து 550 லட்சம் ரூபாய் வருமானம் கிடைத்துள்ளது.
இதன்படி, கடந்த 23ஆம் திகதி கிடைத்த வருமானமே இதுவரை அதிவேக நெடுஞ்சாலைகள் ஊடாக ஈட்டப்பட்ட அதிகூடிய வருமானம் என வீதி அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.