மில்கோ நிறுவனத்தின் புதிய தலைவராக விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சின் செயலாளர் ஜானக தர்மகீர்த்தி நியமிக்கப்பட்டுள்ளார்.
விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீரவினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
இதன்படி, விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சின் செயலாளர் பதவிக்கு மேலதிகமாக மில்கோ நிறுவனத்தின் தலைவருக்கான கடமைகளும் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மில்கோ நிறுவனத்தின் தலைவர் ரேணுக பெரேரா தமது பதவியை இராஜினாமா செய்தத்தைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி, மில்கோ நிறுவனத்தின் தலைவராக ஜானக தர்மகீர்த்தி இன்று (18) பிற்பகல் கடமைகளை பொறுப்பேற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.