போட்டோ கிராபராக மாறிய அஜித்

தல அஜித் ‘விடாமுயற்சி’ படப்பிடிப்பு தளத்தில் போட்டோகிராஃபராக மாறி, பிரபலங்கள் சிலரை எடுத்த புகைப்படங்களை அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா வெளியிட்டுள்ளார்.

விடாமுயற்சி திரைப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சுமார் 70 நாட்கள் நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது.

படப்பிடிப்பு ஒரு பக்கம் பரபரப்பாக நடந்து கொண்டிருக்கும் நிலையில், தற்போது அஜித் ‘விடாமுயற்சி’ படப்பிடிப்பு தளத்தில் போட்டோ கிராப்பராக மாறி அர்ஜுன், மகிழ் திருமேனி, ரெஜினா, மற்றும் ஓம் ராவத் ஆகியோரை படம்பிடித்துள்ளார்.

அஜித் முறையாக போட்டோ கிராஃபி தெரிந்தவர் என்பது நமக்கு தெரிந்தாலும், எப்போதாவது தான் அவர் படம்பிடித்த புகைப்படங்கள் வெளியாகிறது.

அந்த வகையில் தற்போது வெளியாகியுள்ள புகைப்படங்கள் ரசிகர்களுக்கு விருந்து கொடுத்துள்ளது.

Recommended For You

About the Author: admin