இலங்கை மாணவர்களுக்கு விமானி ஆகும் வாய்ப்பு

இலங்கையில் பாடசாலை மாணவர்களை விமான சேவைத் துறையில் ஈடுபடுத்தும் வேலைத்திட்டம் ஒன்றை அரசாங்கம் ஆரம்பித்துள்ளது.

இலங்கை விமான சேவைகள் அதிகாரசபை, இலங்கை ரூபவாகினி கூட்டுத்தாபனம் மற்றும் சிறிலங்கன் எயார்லைன்ஸ் ஆகியன இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திட்டுள்ளன.

பின்தங்கிய பகுதிகளில் உள்ள பாடசாலைகளைச் சேர்ந்த மாணவர்கள் இதற்கு உங்வாங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

எதிர்வரும் 20 ஆண்டுகளில் உலகளவில் சுமார் 25000 விமானங்கள் சேவைகளை நடத்தவிருப்பதாகவும், அதற்காக சுமார் 6 லட்சத்துக்கும் அதிகமான விமானிகள் மற்றும் 40000 விமான கட்டுப்பாட்டாளர்களும் தேவைப்படுவதாகவும் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

அந்த தேவையை இலக்காக கொண்டு பாடசாலை மாணவர்களை தயார்ப்படுத்தி தொழில்வாய்ப்பை ஏற்படுத்துவதற்காக, அரசாங்கத்தினால் குவன் சிஹின என்ற வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: admin