வரலாற்று சிறப்புமிக்க வத்திக்கான் மோசடி வழக்கு விசாரணையில் கர்தினால் அஞ்சலோ பெக்கியூவிற்கு 5.5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
75 வயதான அவர், நிதிக் குற்றங்களுக்காக வாடிகன் நீதிமன்றத்தால் இன்று சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த தீர்ப்பு மூலம் நீண்ட காலமாக இடம்பெற்று வந்த வரலாற்று சிறப்பு மிக்க மோசடி வழக்கின் விசாரணைகள் முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், இந்த குற்றச்சாட்டுகளை கர்தினால் அஞ்சலோ பெக்கியூ மறுத்திருந்தார்.
ஒரு காலத்தில் போப் பிரான்சிஸின் முன்னாள் ஆலோசகராக இருந்த கார்டினல் அஞ்சலோ பெக்கியூ, ஒரு போப் போட்டியாளராகவும் கருதப்பட்டார்.
கர்தினால் அஞ்சலோ பெக்கியூ மீது சொத்துக்குவிப்பு, பதவி துஷ்பிரயோகம் மற்றும் பொய் சாட்சியம் அளிக்க ஒருவரை தூண்ட முயற்சி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இந்நிலையில், குற்றச்சாட்டுகளுக்காக நீதிமன்றில் தண்டனை எதிர்கொள்ளும் கத்தோலிக்க திருச்சபையின் மிக மூத்த மதகுரு என்ற பெயரை கர்தினால் அஞ்சலோ பெக்கியூ பெற்றுள்ளார்.