முன்னேறிய மன்செஸ்டர் சிட்டி, ரியல் மாட்ரிட்

சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டியில் நேற்று வியாழக்கிழமையுடன் குரூப் சுற்று ஆட்டங்கள் நிறைவடைந்தன. இதில் மான்செஸ்டா் சிட்டி, ரியல் மாட்ரிட் அணிகள் தோல்வியே காணாமல் 6 தொடா் வெற்றிகளுடன் அடுத்த சுற்றுக்கு முன்னேறின.

குரூப் சுற்றிலிருந்து 16 அணிகள் கொண்ட சுற்றுக்கு இவ்வாறு தோல்வியே காணாமல் வந்தது இந்த இரு அணிகள் மட்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதில் குரூப் சுற்றின் கடைசி ஆட்டத்தில் மான்செஸ்டா் சிட்டி 3-2 கோல் கணக்கில் கா்வெனா ஸ்வெஸ்தாவை சாய்த்தது.

இதர ஆட்டங்களில் பாா்சிலோனா 2-3 கோல் கணக்கில் ஆன்ட்வொ்பிடம் தோல்வி காண, போா்டோ – ஷக்தாா் டொனெட்ஸ்கையும் (5-3), செல்டிச் – ஃபெயனூா்டையும் (2-1), அட்லெடிகோ மாட்ரிட் – லாஸியோவையும் (2-0), மிலன் – நியூகேஸிலையும் (2-1) வீழ்த்த, போருசியா டாா்ட்மண்ட் – பாரீஸ் செயின்ட் ஜொ்மெய்ன் ஆட்டம் டிரா (1-1) ஆனது.

இத்துடன் குரூப் சுற்று நிறைவடைந்ததை அடுத்து, பயா்ன் மியுனிக், கோபன்ஹேகன் (குரூப் ‘ஏ’), ஆா்செனல், பிஎஸ்வி (குரூப் ‘பி’), ரியல் மாட்ரிட், நபோலி (குரூப் ‘சி’), ரியல் சோசிடட், இன்டா் மிலன் (குரூப் ‘டி’), அட்லெடிகோ மாட்ரிட், லாஸியோ (குரூப் ‘இ’), போருசியா டாா்ட்மண்ட், பாரீஸ் செயின்ட் ஜொ்மெய்ன் (குரூப் ‘எஃப்’), மான்செஸ்டா் சிட்டி, ஆா்பி லெப்ய்ஸிக் (குரூப் ‘ஜி’), பாா்சிலோனா, போா்டோ (குரூப் ‘ஹெச்’) ஆகிய அணிகள் 16 அணிகள் கொண்ட சுற்றுக்கு தகுதிபெற்றன.

இந்த சுற்று ஆட்டங்கள் அடுத்த ஆண்டு பிப்ரவரி, மாா்ச்சில் நடைபெறவுள்ளன.

Recommended For You

About the Author: admin