இலங்கை அணியின் ஆலோசகராக சனத் ஜெயசூரிய

இலங்கை அணியின் முன்னாள் தலைவர் சனத் ஜயசூரிய அணியின் கிரிக்கெட் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இன்று இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதுடன், இதற்கு இலங்கை கிரிக்கெட் சபையும் ஒப்புதல் அளித்துள்ளது.

1996 உலகக் கிண்ணத்தை வென்ற இலங்கை அணியில் முக்கிய வீரரான சனத் ஜயசூரிய திகழ்ந்தார்.

இந்த நியமனத்தின் மூலம் தேசிய அணிக்கு முழுமையான தமது ஆலோசனைகளை சனத் ஜயசூரிய வழங்குவார்.

தற்போது, இலங்கை அணியின் முன்னாள் தலைவர் மஹேல ஜெயவர்தன தேசிய அணியின் ஆலோசகராக பணியாற்றி வருகிறார்.

Recommended For You

About the Author: admin