அமைச்சுப் பதவியில் இருந்து அண்மையில் நீக்கப்பட்ட ரொஷான் ரணசிங்க 2024ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தை எதிர்த்து வாக்களித்துள்ளார்.
அதேபோன்று இரண்டாம் வாசிப்பில் ஆதரவளித்து அரசாங்கத்துடன் இணைந்துக்கொண்ட வடிவேல் சுரேஷ் மூன்றாம் வாசிப்பிலும் வரவு – செலவுத் திட்டத்துக்கு ஆதரவாகவே வாக்களித்துள்ளார்.
வரவு – செலவுத் திட்டத்துக்கு ஆதரவாக 122 வாக்குகளும் எதிராக 81 வாக்குகளும் அளிக்கப்பட்டன.
இதேவேளை, பாராளுமன்றத்தில் பிரசன்னமாகியிருந்த எதிர்க்கட்சி உறுப்பினரான ஹெக்டர் ஹப்புகாமி, வாக்கெடுப்பில் பங்கேற்காது விலகியிருந்தார்.
அதேபோன்று டளஸ் அணியினர் வரவு – செலவுத் திட்டத்தை எதிர்த்தே வாக்களித்திருந்தனரை்.