முல்லை கடலில் காணாமல் போன மூன்று மீனவர்களில் ஒருவர் மீட்பு இருவர் நிலை தொடர்பில் தகவல் இல்லை

முல்லை கடலில் காணாமல் போன மூன்று மீனவர்களில் ஒருவர் மீட்பு இருவர் நிலை தொடர்பில் தகவல் இல்லை

கடந்த ஒக்டோபர் மாதம் இறுதி வாரத்தில் முல்லைத்தீவு கடலில் மீன் பிடிக்கச் சென்ற மூன்று மீனவர்கள் கரை திரும்பாமல் காணாமல் போயிருந்தனர்

காணாமல் குறித்த மீனவர்களை கடற்படை மற்றும் சக மீனர்கள் இணைந்து வானுர்தி கொண்டு தேடியும் கிடைக்கவில்லை

இந்த நிலையில் முல்லைத்தீவு கடலில் காணாமல் போன மூன்று மீனவர்களில் மன்னாரைச் சேர்ந்த மீனவர் ஒருவர் மட்டக்களப்பு வாழைச்சேனை மீனவர்களால் காப்பாற்றப்பட்டுள்ளதாக அவசர தகவல்கள் கிடைத்துள்ளது

குறித்த மீனவர்கள் பல நாள் படகு மூலம் கடலில் மீன் பிடிப்பவர்கள் இவர்களாலேயே குறித்த மீனவர் காப்பாற்றப்பட்டுள்ளார் இன்னும் அவர்கள் கரை திரும்பவில்லை உரிய நபர்களுக்கு தகவல்கள் மாத்திரம்  தெரிவிக்கப்பட்டுள்ளது

இந்த தகவல்களை மன்னாரை சேர்ந்த மீனவரின் குடும்பத்தினருக்கு தெரிவிப்பதற்காக முல்லைத்தீவு மாவட்ட மீனவ சங்கங்களின் சமாச முகாமையாளர் ஒருவரால் மன்னார் மீவட்டத்தில் உள்ள மீனவ பிரதிநிதிகளுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது

ஏனைய இரண்டு மீனவர்களுக்கு என்ன நடந்தது என்பது பற்றிய முழு விபரமும் குறித்த ரிஸ்வான் எனும் மன்னார் மீனவர் கரை திரும்பியவுடனனேயே தெரிய வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

இது ஒரு அவசர தகவல் மேலதிக தகவல்கள் கடைத்ததும் அறியத் தரப்படும் இந்த தகவல்களை பகிர்ந்து கெர்ளுங்கள் இது போன்ற முக்கியமான தகவல்களுக்கு எமது பக்கத்தை பின் தொடர்ந்து இணைந்திருங்கள்

Recommended For You

About the Author: admin