“காலேஜ் சூப்பர் ஸ்டார்ஸ்”: முதல் பாடல்

டாடா பட வெற்றியை தொடர்ந்து நடிகர் கவின் நடித்துள்ள “ஸ்டார்” திரைப்படத்தின் முதல் பாடல் வெளியாகி வைரலாகி வருகின்றது.

பியார் பிரேமா காதல் படத்தை இயக்கிய இளன் இந்த படத்தை இயக்கியுள்ளார்.

இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

கவினுடன் லால், அதிதி போஹங்கர், பிரீத்தி முகுந்தன், கீதா கைலாசம் உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர்.

மேலும், பெப்ரவரி 9ம் திகதி திரைப்படம் வெளியாக இருக்கும் நிலையில், ஸ்டார் படத்தின் முதல் பாடல் வெளியாகியுள்ளது.

நடிகர் ரஜினிகாந்த் பிறந்தநாள் நேற்று கொண்டாடப்பட்ட நிலையில், ஸ்டார் படத்தின் “காலேஜ் சூப்பர் ஸ்டார்ஸ்” என்ற பாடலை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் வெளியிட்டுள்ளார்.

யுவன் இசையில் உருவாகி இருக்கும் இந்த பாடல் வேகமாக வைரல் ஆகி வருகிறது.

Recommended For You

About the Author: admin