இலங்கையில் நுரையீரல் புற்றுநோய் பாதிப்பு சுமார் 50% அதிகரிப்பு

இலங்கையில் நுரையீரல் புற்றுநோய் பாதிப்பு சுமார் 50% அதிகரிப்பு

2010–2020 காலப்பகுதிக்கான தரவுகளின் ஆய்வில், இலங்கையில் ஆண்கள் மற்றும் பெண்கள் இருபாலரிடமும் நுரையீரல் புற்றுநோய் பாதிப்புகள் சுமார் 50% அதிகரித்துள்ளதாக வைத்திய நிபுணர் சமன் இடகொட தெரிவித்துள்ளார்.

சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்துத் தெரிவித்த அவர், புகைப்பழக்கம் இல்லாதவர்களிடமும், குறிப்பாகப் பெண்களிடமும் பாதிப்புகள் அதிகரித்து வருவதைச் சுட்டிக்காட்டியுள்ளார்.

புகைப்பிடித்தல் மட்டுமின்றி, பிறர் வெளியிடும் புகையைச் சுவாசித்தல், வாகனங்கள் மற்றும் தொழிற்சாலைகளின் புகை, காற்றோட்டம் குறைந்த வீடுகளில் விறகு போன்ற எரிபொருட்களைப் பயன்படுத்துவதால் ஏற்படும் காற்று மாசுபாடு ஆகியவையும் அபாயத்தை அதிகரிக்கக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: admin