பேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்ஸ்அப் ஆகிய சோஷியல் மீடியா தளங்களின் அம்சங்களை ஒன்றிணைப்பதற்கான வேலைகளில் ஈடுபட்டுள்ளதாக மெட்டா நிறுவனத்தின் CEO மார்க் ஜூக்கர்பெர்க் தெரிவித்துள்ளார்.
ஸ்டேட்டஸ் அப்டேட்டுகளை பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமில் ஷேர் செய்வது போல அதன் பிற தளங்களிலும் இந்த அம்சத்தை கொண்டு வருவதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது. இந்த அம்சம் தற்போது வாட்ஸ்அப் பயனர்களுக்கும் கிடைக்கவுள்ளது.
WABetaInfo வெளியிட்ட சமீபத்திய அறிக்கையின்படி, வாட்ஸ்அப் யூசர்கள் தங்களது ஸ்டேட்டஸ் அப்டேட்டுகளை இன்ஸ்டாகிராமில் ஸ்டோரிஸ் ஆக ஷேர் செய்வதற்கான அம்சத்தை பெறுகிறார்கள். இந்த அம்சம் தற்போது ஆண்ட்ராய்டு சாதனங்களுக்கான பீட்டாவில் சோதனை செய்யப்பட்டு வருகிறது.
இந்த அம்சம் ஒரு ஆப்ஷனல் தேர்வாக இருக்கும் என்று சொல்லப்பட்டுள்ளது. இன்ஸ்டாகிராமில் ஸ்டேட்டஸ் அப்டேட்டுகளை ஷேர் செய்ய வேண்டுமா வேண்டாமா என்பதை வாட்ஸ் அப் யூசர்கள் முடிவு செய்து கொள்ளலாம்.
ஒரே கண்டன்ட்டை பல்வேறு விதமான பிளாட்ஃபார்ம்களில் பகிரும் போது எடுத்துக் கொள்ளக்கூடிய நேரம் இந்த அம்சம் மூலமாக குறைக்கப்படும் என்று சொல்லப்பட்டுள்ளது. எனினும் இந்த இரண்டு தளங்களின் போட்டோ மற்றும் வீடியோ எடிட்டிங் திறன்கள் வெவ்வேறாக அமைகின்ற காரணத்தினால், வாட்ஸ்அப்பில் இருந்து நேரடியாக சேர்க்கும் பொழுது தங்களது ஸ்டோரீஸ்களின் தரத்தில் இன்ஸ்டாகிராம் யூஸர்கள் வித்தியாசத்தை காண்பார்கள்.
அதே நேரத்தில் யூசர் அனுபவத்தை மேம்படுத்துவதற்காக வாட்ஸ்அப் கூடுதலாக சில அம்சங்களை அறிமுகப்படுத்த உள்ளது. அந்த வகையில் வாட்ஸ்அப் நிறுவனம் சமீபத்தில் ஒரு புதிய AI சாட்ஸ் அம்சத்தை அறிமுகப்படுத்தியது. இதன் மூலமாக யூசர்கள் AI சாட்பாட் உடன் தொடர்பு கொள்ளலாம்.
அறிக்கைகளின் படி, சாட் டாபில் புதிய சாட்களை துவங்குவதற்கான ஐகானிற்கு மேல் ஒரு புதிய பட்டன் சேர்க்கப்பட்டுள்ளது.