இந்திய கிரிக்கெட் அணி தென்னாப்பிரிக்காவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது.
இரு அணிகள் இடையிலான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது.
இந்த நிலையில் இரண்டாவது போட்டி தென்னாப்பிரிக்காவின் கெபெர்ஹாவில் உள்ள மைதானத்தில் நடைபெற்றது.
டாஸ் வென்ற தென்னாப்ரிக்க அணி, இந்திய அணியை பேட் செய்ய பணித்தது.
19 புள்ளி 3 ஓவர்களில் இந்திய அணி 7 விக்கெட் இழப்பிற்கு 180 ரன்கள் எடுத்திருந்தபோது மழை குறுக்கிட்டது.
இதையடுத்து தென்னாப்பிரிக்கா அணிக்கான வெற்றி இலக்கு, 15 ஓவர்களில் 152 என மாற்றியமைக்கப்பட்டது.
தென்னாப்ரிக்க அணி சீரான இடைவெளியில் விக்கெட்களை இழந்தாலும், அதிரடியாக விளையாடி ரன் குவித்தது.
ரீசா ஹெண்ட்ரிக்ஸ் 49 ரன்களும், கேப்டன் மார்க்ரம் 30 ரன்களும் எடுத்தனர். 5 விக்கெட்களை இழந்த நிலையில் 14ஆவது ஓவரில் வெற்றி இலக்கை எட்டியது.
இதையடுத்து 3 போட்டிகள் கொண்ட தொடரில் 1 – 0 என்ற கணக்கில் தென்னாப்பிரிக்கா முன்னிலை வகிக்கிறது.
இரு அணிகளுக்கு இடையிலான கடைசி போட்டி 17ஆம் திகதி நடைபெறவுள்ளது.