மலாய் மொழி தெரிந்தால்தான் மலேசியக் குடியுரிமை கிடைக்கும் என அந்நாட்டின் செனட் சபை தெரிவித்துள்ளது.
“மலேசியக் குடியுரிமைக்கு விண்ணப்பம் செய்பவர்களுக்கு மலாய் மொழி தெரிந்திருக்க வேண்டும் என்ற நிபந்தனையில் மாற்றம் இல்லை.
விண்ணப்பம் செய்பவரின் மலாய் மொழிப் புலமை எழுத்துபூர்வமாகவும் நேர்காணல் வாயிலாகவும் பரிசோதிக்கப்படும்.
அவர்களுக்கு இருக்கும் புலமையின் அடிப்படையில் குடியுரிமை வழங்குவதில் முன்னுரிமை அளிக்கப்படும்”என்று உள்துறைத் துணை அமைச்சர் சம்சுல் அநுர் நசரா தெரிவித்துள்ளார்.
கடந்த மாத இறுதிவரை உள்துறை அமைச்சு 32,000 பேரிடம் இருந்து குடியுரிமை விண்ணப்பங்களைப் பெற்றுள்ளது. அதில் ஒக்டோபர் வரை 10,381 பேருக்குக் குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது.
மேலும் வருடத்திற்கு 10 ஆயிரம் பேருக்கே குடியுரிமை வழங்கப்பட்டு வந்தன. அது தற்போது 10 ஆயிரம் பேருக்கு வழங்கும் இலக்கை தாண்டியுள்ளது.