தங்கத்தின் விலையில் திடீர் வீழ்ச்சி!

உலக சந்தையில் தங்கத்தின் விலையில் தற்போது திடீர் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதனால் இலங்கையிலும் தங்கத்தின் விலையில் சற்று வீழ்ச்சி நிலை நிலவுகிறது.

இதன்படி, இலங்கையில் இன்று (13) ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 648,437 ரூபாவாக வீழ்ச்சியடைந்துள்ளது.

இன்றைய நிலவரத்தின்படி, 24 கரட் தங்கப் பவுண் ஒன்று 183,000 ரூபாவாக பதிவாகியுள்ளது.

நகை வாங்குவோரிற்கு மகிழ்ச்சி
அதேபோல 22 கரட் தங்கப் பவுண் ஒன்று 167,800 ரூபாவாக பதிவாகியுள்ளது.

மேலும், 21 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலை இன்றையதினம் 160,200 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அதன்படி இலங்கையில் கடந்த சில தினங்களை விட இன்று தங்கத்தின் விலையில் சடுதியான வீழ்ச்சி ஏற்பட்டுள்ளமை தங்க நகை வாங்குவோரிற்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Recommended For You

About the Author: webeditor