நாட்டில் நிலவும் சிரற்ற காலநிலையால் அடுத்தடுத்து மலையக ரயில் சேவைகளில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக இலங்கை ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.
பதுளை ஹாலிஎல மற்றும் தெமோதரை ரயில் நிலையங்களுக்கு இடையில் மண்மேடு சரிந்து வீழ்ந்துள்ளது.
இதனால் மலையகத்திற்கான ரயில் சேவையில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக இலங்கை ரயில்வே திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
தற்போது, மண்மேட்டை அகற்றும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.