இலங்கையில் பாடசாலை மாணவிகளின் ஆபத்தான பழக்கம் தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

கடந்த சில நாட்களாக பாடசாலை மாணவிகளை இலக்கு வைத்து போதைப்பொருள் மற்றும் மாத்திரைகள் விற்பனை செய்யும் பலரை பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

இது தொடர்பான தகவல்களை ஆராய்ந்த பொலிஸாருக்கு பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் கிடைத்துள்ளது.​​

பெரும்பாலும் கொழும்பில் இருந்து வெகு தொலைவில் உள்ள அநுராதபுரம் போன்ற நகரங்களில், பாடசாலை மாணவர்கள் போதைப்பொருள் மற்றும் போதை மாத்திரைகளுக்கு அதிகளவில் அடிமையாகியுள்ளமை தெரியவந்துள்ளது.

போதைப்பொருள்
விமானப்படை புலனாய்வு பிரிவினர் வழங்கிய தகவலுக்கமைய, அநுராதபுரம் தபால் நிலையத்திற்கு அருகில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது பாடசாலை மாணவர்களுக்கு போதைப்பொருள் விற்பனை செய்த இருவரை பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகள் அண்மையில் கைது செய்துள்ளனர்.

நேற்று அநுராதபுரம் இராணுவ புலனாய்வு அதிகாரிகள் வழங்கிய தகவலின் அடிப்படையில் ஆயிரம் போதைப்பொருட்களுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அத்துடன், அநுராதபுரம் நகரிலுள்ள பிரபல மருந்தகம் ஒன்றில் இருந்தே அந்த போதை பொருள் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

பாடசாலை மாணவிகள்
அநுராதபுரம் நகரில் பாடசாலை மாணவிகளை இலக்கு வைத்து போதை மாத்திரைகள் மற்றும் போதைப்பொருள் விற்பனை செய்வதன் மூலம் மாணவிகள் மிகவும் பாதுகாப்பற்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் தலைவர் பிரியந்த பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

போதைப்பொருள் வாங்க பணம் தேடுவதற்காக, பாடசாலைகளில் ஆண் மாணவர்களிடம் உதவி பெறுவதாகவும் அதற்காக மாணவிகள் தங்கள் பிறப்புறுப்பைத் தொட அனுமதித்து பணம் பெற ஆசைப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்த ஆபத்தான நிலைமையில் இருந்த தங்கள் பிள்ளைகளை பாதுகாத்துக் கொள்ளுமாறு அவர் பொது மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

Recommended For You

About the Author: webeditor