தனியார் பேருந்துகளில் வோக்கி டோக்கி இயந்திரத்தை பொருத்துவது குறித்து இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் கவனம் செலுத்தியுள்ளது.
பேருந்துகளில் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் மற்றும் ஏனைய மோசடிகளை தடுக்கும் நோக்கில் இந்த திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்தார்.