தேசிய தீபாவளி பண்டிகை நிகழ்வு வவுனியாவில்

தேசிய தீபாவளி பண்டிகை – 2023 நிகழ்வானது வவுனியா மாவட்டத்தில் சிறப்புற முன்னெடுக்கப்படவுள்ளது.

புத்தசாசன, மத மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு, இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம், வவுனியா மாவட்டச் செயலகம் மற்றும் வவுனியா ஸ்ரீ கந்தசுவாமி ஆலயம் ஆகியவை இணைந்து முன்னெடுக்கும் இந்நிகழ்வு வவுனியா ஸ்ரீ கந்தசுவாமி கோவில் மண்டபத்தில் 12.11.2023 அன்று பி.ப. 3.30 மணிக்கு நடைபெறவுள்ளது.


இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தால் அமைச்சின் ஏற்பாட்டில் தீபாவளியை முன்னிட்ட முத்திரை வெளியீடும் இந்து சமய அறநெறிப் பாடசாலை மாணவர்களின் கலை நிகழ்வுகள் உள்ளிட்ட இன்னோரன்ன அம்சங்களும் சிறப்புற முன்னெடுக்கப்படவுள்ள இந்நிகழ்விலே, மதகுருமார்கள், வவுனியா மாவட்ட இந்து ஆலய பரிபாலன சபையினர், அமைச்சர்கள், வடமாகாண ஆளுநர்,  பாராளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சின் செயலாளர், மாவட்டச் செயலாளர், திணைக்களப் பணிப்பாளர், அரச நிறுவனங்களின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பல பிரமுகர்களும் இந்நிகழ்வில் பங்கேற்கவுள்ளனர்.

Recommended For You

About the Author: S.R.KARAN