கழிவறை கிருமிநாசினியை குடித்த சிறுமிக்கு நிகழ்ந்த சோகம்!

கொழும்பு – நாரஹேன்பிட்டிய பிரதேசத்தில் தலைமை வார்டன், ஊழியர் ஒருவரின் திட்டுதல் மற்றும் தாக்குதலை தாங்க முடியாத 14 வயதுச் சிறுமி, கழிவறையை சுத்தம் செய்ய பயன்படுத்தப்படும் கிருமி நாசினி திரவத்தை குடித்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை, நாரஹேன்பிட்டி பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

சித்திரவதை செய்த பெண்
விசாரணையில், கடந்த (06.11.2023) ஆம் திகதி மதியம் அனாதை இல்லத்தின் தலைமை காப்பாளரும், சமையலறை பணிப்பெண்ணும் சிறுமியை துஷ்பிரயோகம் செய்து தாக்கியதாகவும், கழிவறையை சுத்தம் செய்ய பயன்படுத்தப்படும் கிருமி நாசினி திரவத்தை சிறுமி குடித்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

வார்டன் மற்றும் சமையலறைப் பணிப்பெண் ஆகியோர் கிருமி நாசினிகள் அடங்கிய பாட்டிலை சிறுமியின் அருகில் வைத்து, ‘குடித்து, செத்து விடு’ என்று கூறி மேலும் அடித்து துன்புறுத்தியமை விசாரணையில் தெரியவந்துள்ளது.

Recommended For You

About the Author: webeditor