பாகிஸ்தானை வீழ்த்தி ஆப்கானிஸ்தான் அபார வெற்றி!

இன்று நடைபெற்ற உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி, பாகிஸ்தானை 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று நடைபெற்ற போட்டியில், முதலில் டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது. வீசப்பட்ட 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 282 ரன் எடுத்தது. அந்த அணியின் பாபர் அசாம் மற்றும் அப்துல்லா ஷபிக் அரைசதம் அடித்தனர்.

வெற்றிபெற 283 ரன் என்ற கடின இலக்குடன் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் தொடக்கத்தில் இருந்து நிதானமாக விளையாடியது. 49வது ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 283 ரன் எடுத்து வெற்றி பெற்றது.

அந்த அணியின் ராமானுல்லா குர்பாஸ், இப்ராகிம் சத்ரான், ரகமட் ஷா ஆகியோர் அரை சதம் விளாசினார். இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றதன் மூலம் உலகக் கோப்பை புள்ளிவிவர பட்டியலில் 4 புள்ளிகளுடன் 6வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. கடந்த முறை உலகக் கோப்பை வென்ற இங்கிலாந்து அணி தற்போது கடைசி இடத்தில் உள்ளது.

Recommended For You

About the Author: admin