இந்திய கிரிக்கெட் சுழற்பந்து ஜாம்பவான் பிஷன் சிங் பேடி காலமானார்

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து ஜாம்பவான் பிஷன் சிங் பேடி உடல்நலக் குறைவால் காலமானார்.

இந்திய கிரிக்கெட் டெஸ்ட் அணியின் முன்னாள் கேப்டனும், சுழற்பந்து வீச்சாளருமான பிஷன் சிங் பேடி, உடல்நலக் குறைவால் இன்று காலமானார்.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் பிஷன் சிங் பேடி. அவருக்கு வயது 77. பஞ்சாபில் உள்ள அமிர்தசரஸை சேர்ந்த இடதுகை சுழற்பந்து வீச்சாளரான பிஷன் சிங் 1967 முதல் 1979 வரை இந்திய அணிக்காக விளையாடியுள்ளார். 1970களில் இந்திய அணிக்காக ஆடியவர் பிஷன் சிங் பேடி இந்திய அணியின் கேப்டனாகவும் இருந்தவர். குறிப்பாக 1975 உலகக் கோப்பை போட்டியில், பேடி 12 ஓவர்களில் 8 மெய்டன்கள் செய்து 6 ரன்களை மட்டும் விட்டுக்கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தி கவனம் பெற்றவர்.

இவர் இந்திய அணிக்காக 67 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 266 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அதேபோல 370 முதல் தர போட்டிகளில் 1560 விக்கெட்டுகளை வீழ்த்தியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்திய அணியின் மேலாளராகவும், தேர்வுக்குழு உறுப்பினராகவும் பிஷன் சிங் பேடி பணியாற்றியுள்ளார். இவருக்கு 1970ம் ஆண்டு பத்மஸ்ரீ விருது வழங்கி மத்திய அரசு கெளரவித்துள்ளது.

அண்மைகாலமாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த பிஷன் சிங் பேடி, இன்று உயிரிழந்தார். இவரது மறைவுக்கு கிரிக்கெட் வீரர்கள், ரசிகர்கள் தங்களது இரங்கலை தெரிவித்துவருகின்றனர்

Recommended For You

About the Author: admin