உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரின் 19ஆவது லீக் போட்டியில் தென் ஆப்பிரிக்கா – இங்கிலாந்து அணிகள் இன்று மோதுகிறது.
இதில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இங்கிலாந்து அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி தென் ஆப்பிரிக்க அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக டி காக் – ஹென்றிக்ஸ் களமிறங்கினர்.
அதிரடி ஆட்டக்காரர் டிகாக் 4 ஓட்டங்களில் ஆட்டமிழந்து அதிர்ச்சி கொடுத்தார். இதனையடுத்து ஹென்றிக்ஸ் -ரஸ்ஸி வான் டெர் டுசென் ஜோடி சிறப்பாக ஆடினர்.
தென் ஆப்பிரிக்கா அணி 125 ஓட்டங்களை பெற்றிருந்த போது இந்த ஜோடி பிரிந்தது. ரஸ்ஸி வான் டெர் டுசென் 60 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.
இந்த ஜோடி 2ஆவது விக்கெட்டுக்கு 121 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பெற்றது.
இதனையடுத்து ஹென்றிக்ஸ் 85 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த மார்க்ரம் 42 ஓட்டங்களிலும் மில்லர் 5 ஓட்டங்களிலும் ஆட்டமிழந்தனர். அப்போது தென் ஆப்பிரிக்கா அணியின் ஓட்ட எண்ணிக்கை 36.3 ஓவரில் 243 ஓட்டங்களாக இருந்தது.
இதனையடுத்து கிளாசன் மற்றும் யான்சன் ஜோடி இங்கிலாந்து அணியின் பந்து வீச்சை சரமாறியாக விளாசினர்.
அதிரடியாக விளையாடிய கிளாசன் சதமும் யான்சன் அரைசதம் அடித்து அசத்தினார். சதம் விளாசிய கிளாசன் 109 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.
இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்த யான்சன் 75 ஓட்டங்களில் களத்தில் இருந்தார்.
இறுதியில் தென் ஆப்பிரிக்கா அணி 50 ஓவர்கள் முடிவில் 399 ஓட்டங்களை குவித்தது. இங்கிலாந்து அணி தரப்பில் டாப்லி 3 விக்கெட்டும் ஆதில் ரஷித் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
400 என்ற ஓட்ட எண்ணிக்கையை நோக்கி இங்கிலாந்து அணி துடுப்பெடுத்தாடி வருகிறது.
400 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு துவக்கத்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது. இங்கிலாந்து அணியின் டாப் ஆர்டர் பேட்டர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர். கடைசியில் சிறப்பாக ஆடிய அட்கின்சன் மற்றும் மார்க் வுட் முறையே 35 மற்றும் 43 ரன்களை எடுத்தனர்
அட்கின்சன் 35 ரன்களில் ஆட்டமிழக்க, 22 ஓவர்களில் இங்கிலாந்து அணி 170 ரன்களில் 9 விக்கெட்டுகளை இழந்தது. மார்க் வுட் ஆட்டமிழக்காமல் 43 ரன்களை குவித்து இருந்தார். அடுத்து களமிறங்க வேண்டிய ரீஸ் டோப்லி பேட்டிங் ஆடவில்லை. இதன் காரணமாக தென் ஆப்பிரிக்கா அணி 229 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
தென் ஆப்பிரிக்கா சார்பில் சிறப்பாக பந்து வீசிய ஜெரால்ட் கோட்ஸி மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார். லுங்கி நிகிடி, மார்கோ ஜான்சன் தலா இரண்டு விக்கெட்டுகளையும், ககிசோ ரபாடா மற்றும் கேசவ் மகராஜ் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.