மாடு திருடிய பொலிஸ் அதிகாரி பணி நீக்கம்

திருகோணமலை – கந்தளாய் பிரதேசத்தில் மாடு ஒன்றை திருடிய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் பணியிலிருந்தும் இடைநிறுத்தப்பட்டுள்ளார்.

கந்தளாய் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிவரும் பொலிஸ்கான்ஸ்டபிள் அதிகாரி பணியில் இருந்து நேற்றைய தினம் (22.08.2023) இடைநிறுத்தப்பட்டுள்ளார்.

குறித்த பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிவரும் அதே பிரதேசத்தைச் சேர்ந்த 31 வயதுடைய பொலிஸ்கான்ஸ்டபிள் ஒரு இலட்சத்து 50 ஆயிரம் ரூபா பெறுமதியான மாடு ஒன்றை திருடிய குற்றச்சாட்டில் கடந்த (20.08.2023) ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்டவர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில், அவர் நீதிமன்ற பிணையில் வெளிவந்துள்ளார். இந்நிலையில், அவரை திருகோணமலை மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் உடனடியாக பணியிலிருந்து இடைநிறுத்தியுள்ளதாக அவர் தெரிவித்தார்.

Recommended For You

About the Author: webeditor