தங்கத்தின் விலை உலக சந்தையில் நாளுக்கு நாள் ஏற்ற, இறக்கத்துடன் பதிவாகி வருகின்றது.
இந்நிலையில் இன்றையதினம் (02-03-2023) ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை இலங்கை ரூபாவின் படி 650,185.00 ரூபாவாக பதிவாகியுள்ளது.
இலங்கையில் கடந்த இரண்டு மாதங்களாக தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்த வண்ணம் உள்ளது.
இந்த நிலையில், 24 கரட் தங்கப் பவுண் ஒன்று இன்று 183,500.00 ரூபாவாக பதிவாகியுள்ளது.
இதேபோல் 22 கரட் தங்கப் பவுண் ஒன்று 168,250.00 ரூபாவாக பதிவாகியுள்ளது.
மேலும், 21 கரட் தங்கப் பவுண் ஒன்று 160,600.00 ரூபாவாக இன்று பதிவாகியுள்ளது.
இருப்பினும், ஆபரணத் தங்கத்தின் விலை இந்த விலைகளில் இருந்து மாற்றம் பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, இலங்கையில் கடந்த மாதங்களில் 22 கரட் தங்கப் பவுண் ஒன்று வரலாறு காணாத வகையில் உயர்ந்து 200,000 ரூபாவை எட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.