இந்த ஆண்டு இலங்கையர்களுக்கு 2,000 தாதியர் வேலைவாய்ப்பை வழங்க இஸ்ரேல் இணங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இஸ்ரேலின் விசேட பிரதிநிதிகள் குழு, தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்காரவை சந்தித்தபோது, இதற்கான உறுதிப்பாடு வழங்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதேவேளை , இஸ்ரேலுக்கான தாதியர் தொழில் வாய்ப்பை வழங்குவதற்காக இடைத்தரகர்கள் பணம் கோரினால் அது குறித்த தகவல்களை தமக்கு வழங்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதனை இஸ்ரேல் நாட்டு குடித்தொகை மற்றும் புலம்பெயர்வுக்கான அமைப்பின் பிரதிநிதிகள் கோரியுள்ளனர்.