வசூல் வேட்டை நடாத்தும் லவ் டுடே

லவ் டுடே
தமிழ் சினிமாவில் இப்போது செம வசூல் வேட்டை நடத்திவரும் திரைப்படம் லவ் டுடே. கோமாளி பட இயக்குனர் பிரதீப் இயக்கி நடித்துள்ள இப்படத்தில் இவானா, ரவீனா, சரத்குமார் என பலர் நடித்துள்ளார்கள்.

கடந்த நவம்பர் 4ம் தேதி வெளியான இப்படம் கல்பாத்தி நிறுவனம் தான் தயாரித்துள்ளார்கள்.

இப்படம் வெளியாகி 5 நாள் முடிவில் உலகம் முழுவதும் படம் ரூ. 40 கோடி வரை வசூலித்துவிட்டதாம், தமிழை தாண்டி கர்நாடகா போன்ற இடங்களிலும் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதாம்.

கர்நாடகா பாக்ஸ் ஆபிஸ்
முதல் நாளில் 32 ஷோக்களுடன் திரையிடப்பட்ட இப்படம் 7வது நாளில் 151 ஷோக்கள் பெங்களூரு சிட்டியில் அதிகமாக ஓடுகிறதாம். 6 நாள் முடிவில் கர்நாடகாவில் மட்டுமே படம் ரூ. 1.45 கோடி வரை வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.

Recommended For You

About the Author: webeditor