கனடாவில் தமிழ் சமூகத்திற்குப் பெருமை சேர்த்த தமிழ் பெண் – ரொரன்ரோ மாவட்ட கல்விச் சபை உறுப்பினராக பதவியேற்றார் ரவிச்சா
கடந்த ஒக்டோபர் 26ஆம் திகதி நடைபெற்ற 2026 ரொறன்ரோ மாநகராட்சித் தேர்தலில், ரொறன்ரோ மாவட்டக் கல்விச் சபையின் 11ஆம் வட்டாரத்தில் போட்டியிட்டு 11,770
வாக்குகளைப் பெற்று அமோக வெற்றியீட்டிய ரவிச்சா ரவீந்திரன், புதன்கிழமை கல்விச் சபை உறுப்பினராக உத்தியோகபூர்வமாகப் பதவியேற்றுக்கொண்டார்.
ஸ்காபரோ மத்திய தொகுதி மற்றும் ஸ்காபரோ வடக்குத் தொகுதி ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய கல்விச் சபை வட்டாரம் 11 சார்பாகத் தெரிவுசெய்யப்பட்டுள்ள அவர், அப்பகுதி மக்களின் கல்விசார் பிரதிநிதியாகப் பணியாற்றவுள்ளார்.
ரொறன்ரோவிலுள்ள மாவட்டக் கல்விச் சபையின் தலைமை அலுவலகத்தில் (5050 Yonge Street) நடைபெற்ற உத்தியோகபூர்வ நிகழ்வில், தனது நான்கு ஆண்டுகாலப் புதிய பதவிக்கான சத்தியப்பிரமாணத்தை மேற்கொண்டு அவர் பொறுப்பேற்றுக்கொண்டார்.
இதன்மூலம், எதிர்வரும் நான்கு ஆண்டுகளுக்கு மாணவர்களின் கல்வி முன்னேற்றம், பெற்றோர்களின் பங்களிப்பு மற்றும் பாடசாலைச் சமூகத்தின் தேவைகளை முன்னிறுத்தி வட்டாரம் 11 மக்களின் குரலாக அவர் செயற்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

