2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் இரண்டாம் வாசிப்பில் 97 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்!

2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் இரண்டாம் வாசிப்பில் 97 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்!

இலங்கையின் 2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு, நாடாளுமன்றத்தில் 97 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இதற்காக இன்று நடைபெற்ற வாக்கெடுப்பில், வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக 157 நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்களித்துள்ளனர்.

 

எதிராக 60 உறுப்பினர்கள் வாக்களித்துள்ளதுடன், எவரும் வாக்களிப்பில் இருந்து விலகவில்லை.

 

இதன்படி, 97 மேலதிக வாக்குகளால் 2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு நிறைவேற்றப்பட்டுள்ளது.

 

இதனைத் தொடர்ந்து, வரவு செலவுத் திட்டம் குழுநிலை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

 

இதற்கான இறுதி வாக்கெடுப்பு எதிர்வரும் டிசம்பர் மாதம் 14ஆம் திகதி நடைபெறவுள்ளது.

Recommended For You

About the Author: admin