விசாரணை அல்லது குற்றச்சாட்டு இன்றி தடுத்து வைக்கப்பட்டுள்ள காசாவைச் சேர்ந்த 14 பாலஸ்தீனிய மருத்துவர்களை

விசாரணை அல்லது குற்றச்சாட்டு இன்றி தடுத்து வைக்கப்பட்டுள்ள காசாவைச் சேர்ந்த 14 பாலஸ்தீனிய மருத்துவர்களை

விடுவிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை இஸ்ரேல் உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளதாக

‘மனித உரிமைகளுக்கான இஸ்ரேல் மருத்துவர்கள்’ (Physicians for Human Rights Israel) அமைப்பு தெரிவித்துள்ளது.

தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களில் மருத்துவமனை இயக்குநர்கள் மற்றும் சிறப்பு மருத்துவர்களும் அடங்குவர்; இவர்களில் சிலர் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாகச் சிறையில் உள்ளனர்.

இதற்கிடையில், கமால் அத்வான் (Kamal Adwan) மருத்துவமனையின் இயக்குநர் ஹுஸாம் அபு சஃபியாவின் (Hussam Abu Safiya) உடல்நிலை மோசமடைந்து வருவது குறித்து கவலை எழுந்துள்ள போதிலும்,

அவருக்குச் சுயாதீன மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ள அனுமதி கோரிய மனுவை இஸ்ரேல் மாவட்ட நீதிமன்றம் நிராகரித்துள்ளதாகவும் அந்த மனித உரிமை அமைப்பு கூறியுள்ளது.

2024 டிசம்பரில் மருத்துவமனை மீது இஸ்ரேல் நடத்திய சோதனையின் போது கைது செய்யப்பட்ட அபு சஃபியா, சிறைக் காவலில் கடுமையான எடை இழப்பு,

உரிய சிகிச்சையளிக்கப்படாத உடல்நலப் பிரச்சினைகள் மற்றும் காயங்களால் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், சிறைக் காவலர்கள் தன்னைத் தாக்கியதாக அவர் தனது வழக்கறிஞரிடம் முன்னதாகத் தெரிவித்திருந்தார்.

காசா மீதான இஸ்ரேலின் போரினால் ஏற்பட்ட பரவலான அழிவுகளைத் தொடர்ந்து,

அப்பகுதியின் சுகாதாரத் துறை கடுமையான மருத்துவப் பணியாளர் பற்றாக்குறையை எதிர்கொண்டுள்ள சூழலில் இந்த நீதிமன்ற முடிவுகள் வெளியாகியுள்ளதாக அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

Recommended For You

About the Author: admin