பெண் தலைமைத்துவக் குடும்பங்களுக்கு 3% வட்டியில் ரூ.1 மில்லியன் வரை கடன்!
பெண் தலைமைத்துவக் குடும்பங்களின் பொருளாதார நிலையை மேம்படுத்தும் நோக்கில், சமூர்த்தி வங்கிகள் ஊடாக 3 வீத சலுகை வட்டியில் கடன் வழங்கும் புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
இதற்கமைய, பெண்கள் குழுக்களாக இணைந்து அதிகபட்சம் ஒரு மில்லியன் ரூபாய் வரை கடன் பெற்றுக்கொள்ளும் வகையில் இந்தத் திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
மேலும், பெண்களுக்கு சமூர்த்தி வங்கிகள் ஊடாக மொத்தம் 12,500 மில்லியன் ரூபாய் கடன் வழங்குவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்தக் கடன்களுக்கான வட்டி மானியத்தை வழங்குவதற்காக முதற்கட்டமாக 200 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
பெண்களின் சுயதொழில் முயற்சிகள் மற்றும் பொருளாதார சுயநிலையை வலுப்படுத்துவதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.

