வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்களின் குடும்பங்களுக்கு இலவச இரட்டைக் குடியுரிமை வழங்க முன்மொழிவு

வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்களின் குடும்பங்களுக்கு இலவச இரட்டைக் குடியுரிமை வழங்க முன்மொழிவு

வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்களின் குடும்ப உறவுகளை இலங்கையுடன் மேலும் வலுப்படுத்தும் நோக்கில், இரட்டைக் குடியுரிமையை இலவசமாக வழங்கும் புதிய திட்டமொன்றை 2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் அரசாங்கம் முன்மொழிந்துள்ளது.

இதற்கமைய, இரட்டைக் குடியுரிமைக்கு விண்ணப்பிக்கும் இலங்கையர்களின் வாழ்க்கைத்துணை மற்றும் பிள்ளைகளுக்கும், மூன்றாம் தலைமுறையைச் சேர்ந்த வம்சாவளியினருக்கும் கட்டணமின்றி இரட்டைக் குடியுரிமை வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

இதற்காக ‘Global Sri Lankan Heritage Citizen’ எனும் திட்டம் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

வெளிநாடுகளில் வாழும் இலங்கை வம்சாவளியினரின் அறிவு, திறன் மற்றும் ஆற்றல்களை நாட்டின் அபிவிருத்தியுடன் இணைப்பதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.

எனினும், தகுதி நிபந்தனைகள் மற்றும் நடைமுறைப்படுத்தும் விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படவுள்ளன.

Recommended For You

About the Author: admin