பிரான்ஸில் குறைந்தபட்ச ஊதியம் €1,500-ஐ தாண்டியது! டிசம்பர் முதல் புதிய சம்பள உயர்வு
பிரான்ஸில் குறைந்தபட்ச ஊதிய உயர்வு வழக்கமான ஜனவரி மாதத்திற்கு முன்பாகவே டிசம்பர் 1 முதல் அமல்படுத்தப்படவுள்ளது.
பிரதமர் Sébastien Lecornu தலைமையிலான அரசு, நாட்டின் குறைந்தபட்ச ஊதியமான SMIC-ஐ 1.6% உயர்த்துவதாக அறிவித்துள்ளது.
புதிய சம்பள விவரங்கள்:
– தற்போதைய மாத நிகர குறைந்தபட்ச ஊதியம்: €1,477.93
– டிசம்பர் முதல் புதிய மாத நிகர ஊதியம்: சுமார் €1,502
– மாதத்திற்கு கூடுதலாகக் கிடைப்பது: சுமார் €23.65
– ஊதிய உயர்வு: 1.6%
ஆனால் அரசின் இந்த அறிவிப்பில் தொழிற்சங்கங்கள் திருப்தியடையவில்லை.
CFDT தொழிற்சங்கம் மாதத்திற்கு கூடுதலாக €100 உயர்வு கோரியிருந்தது. CGT தொழிற்சங்கம் 10% ஊதிய உயர்வு வேண்டும் என வலியுறுத்தியது.
வாழ்க்கைச் செலவு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், அறிவிக்கப்பட்டுள்ள இந்தச் சிறிய உயர்வு போதுமானதல்ல என்பது தொழிற்சங்கங்களின் விமர்சனம்.
யாருக்கு இந்த உயர்வு பொருந்தும்?
பிரான்ஸின் தேசிய குறைந்தபட்ச ஊதியமான SMIC பெறும் ஊழியர்களுக்கே இந்த மாற்றம் தொடர்புடையது.
பிரான்ஸில் வேலை செய்யும் அனைவருக்கும் தானாகவே 1.6% சம்பள உயர்வு கிடைக்கும் என்று இதைப் புரிந்துகொள்ளக் கூடாது.
உங்கள் கருத்து என்ன?
பிரான்ஸில் மாதம் கூடுதலாக €24 கிடைப்பது தற்போதைய வாழ்க்கைச் செலவுகளைச் சமாளிக்கப் போதுமானதா?
பிரான்ஸில் வாழும் உங்கள் நண்பர்களுடனும் இந்தத் தகவலைப் பகிருங்கள்.

