நியூஸிலாந்தில் இலங்கை மாணவி சாதனை!
பல்கலைக்கழகத்தின் கௌரவமான உதவித்தொகையைப் பெற்று அசத்தல்
நியூஸிலாந்தில் பிரபல அவொண்டேல் கல்லூரியில் கல்வி கற்று வந்த இலங்கையைச் சேர்ந்த சவிந்தி திசநாயக்க என்ற மாணவி, அந்த நாட்டு மாணவர்களை விஞ்சி பல பாடங்களில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.
பாடசாலையின் 13ஆம் ஆண்டில் கல்வி கற்ற சவிந்திபாடசாலையின் பிரதான மாணவி மற்றும் மாணவர் பிரதிநிதியாகவும் திறம்படச் செயல்பட்டு வந்துள்ளார்.
கல்லூரியின் வருடாந்திரப் பரிசளிப்பு விழாவில், உயிரியல், ரசாயனவியல் மற்றும் கணிதம் ஆகிய கடினமான பாடங்களில் மிக உயர்வான புள்ளிகளைப் பெற்று பல முக்கியப் பரிசுகளைத் தட்டிக் சென்றுள்ளார்.
நியூஸிலாந்தில் தேசியக் கல்விச் சான்றிதழ் முறையான NCEA தேர்வுகளில் சிறந்து விளங்கி, பள்ளியின் இரண்டாமிடத்திற்கான மதிப்புமிக்க ‘Proxime Accessit’ கௌரவச் சான்றிதழையும் வென்றுள்ளார்.
அவரது இந்தச் சிறப்பான கல்வித் திறமை மற்றும் தலைமைத்துவப் பண்புகளைப் பாராட்டி, புகழ்பெற்ற ஆக்லாந்து பல்கலைக்கழகம் 27,000 டொலர் மதிப்பிடப்பட்ட மாபெரும் கல்விச் சலுகையை வழங்கி இப் பெண்ணைப் பெருமைப்படுத்தியுள்ளது.
தாய்நாட்டிலிருந்து வெகுதூரத்தில் வாழ்ந்தாலும், தனது அசைக்க முடியாத விடாமுயற்சியாலும் தன்னம்பிக்கையாலும் இலங்கையின் புகழை உலக அரங்கில் அவர் உயர்த்திப் பிடித்துள்ளார்.
கல்வியில் நமது குழந்தைகளுக்குச் சரியான வழிகாட்டுதலும் முறையான இலக்குகளும் வழங்கப்பட்டால், அவர்கள் உலகளவில் எந்தவொரு சவாலையும் எளிதில் வென்று சாதிக்க முடியும் என்பதை இது நிரூபித்துக் காட்டுகிறது.

